பெறுநர்: மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு
மதிப்புமிகு ஐயா அவர்களுக்கு வணக்கம்!
நன்றி நன்றி
ஒட்டுமொத்த ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று ஆணையர் பதவியை ரத்து செய்து இயக்குநர் பதவியை கொண்டுவந்து மாநில கல்விக் கொள்கையை நிலைநாட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு தகுதித் தேர்வு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் மற்றும் அரசு கொள்கை முடிவு மேற்கொண்டு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆவண செய்யவேண்டும்
12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசியர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவரவேண்டும், அதுவரையில் வாரத்தில் அனைத்து வேலை நாட்களும் பணிநாட்காளக வழங்கி மாதம் ரூ 25.000/- ஊதியம் வழங்க வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்குதல் மற்றும் காலியாக உள்ள பள்ளிகளுக்கு மாற்று பணி வழங்கவேண்டும். www.kalviseithiofficial.com
நடத்தப்படாமல் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவேண்டும்
2009 ம் பணியில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் பொருட்டு ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்து நடைமுறையில் உள்ளது. மேலும் ஒரு தேர்வு தேவையற்றது ஆதலால் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், மேலும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம் என ஆணையிட வேண்டும்
மேற்படிப்பிற்கான ஊக்க ஊதியம் பெறாத ஆசியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் ஊக்க ஊதியம் பெற தேர்ச்சி அறிவிக்கும் மாதத்தில் இருந்து வழங்கிட வேண்டும். மேலும் ஒன்றிய அரசை பின்பற்றி ஊக்கதொகையாக மாற்றக் கூடாது, ஏற்கனவே உள்ளாவாறு ஊக்க ஊதியமாக வழங்க வேண்டும் www.kalviseithiofficial.com ஊர்புற நூகலகர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவரவேண்டும், ஆசிரியர்கள் பணயாளர்களின் காலி பணியிடங்களை உடனே பூர்த்தி செய்யவேண்டும்,
இயக்குநர. அலுவகம் முதல் பள்ளி வரை பெருமளவில் இளநிலை உதவியாளர்கள், அலுவலக் உதவியாளர்கள், இரவு காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிண்டங்கள் காலியாக உள்ளதால் பணிகள் பெருமளவில் காலத்தாமதும் ஆகிறது, ஆதலால் உடனே காலிப்பணியிடத்தை நிரப்பிட வேண்டும்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை வெவ்வேறு அரசு பள்ளிகளில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பணியாணை வழங்கப்பட்டு பணியில் சேருவதற்கு அப்பள்ளிக்கு சென்றால் பணியேற்க விடாமல் திருப்பி அனுப்புகின்றனர்,இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி இல்லாதபட்சத்தில் காலியாக உள்ள அரசு பள்ளிகளுக்கு ஆணைவழங்க வேண்டும்
ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தில் 6000 ஆசிரியர்கள் பயிற்றுனர் பணியிடம் உள்ளது ஆனால் தற்போது 2800 பேர் தான் பணியாற்றி வருகின்றனர் இதனால் பணிசுமை அதிகமாக இருப்பதால் திட்டம் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆதலால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், விருப்ப பொது மாறுதல் நடத்தப்பவேண்டும், ஆசிரியர் பயிற்றுனர்களை கட்டாயத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மாறுதல் அளிக்காமல் விருப்பத்தில் பேரிலேயே பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்யவேண்டும், அரசு மாதிரிப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் மாணவர்களல பயின்று வருகிறார்கள் இதில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள் தற்போது விருப்ப மாறுதல் பெற்று பெரும்பாலானோர் வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டார்கள் அந்த பணியிடங்கள் எல்லாம் பெருமளவில் காலியாக உள்ளது,உதாரணத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் 1 முதல் 10ம் வகுப்புவரை 300 மாணவர்கள் பயின்று வருகிறார்கள் அதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 100கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்
ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாகுறையில் இரண்டு இடைநிலை ஆசிரியைகள் மட்டுமே பணியாற்றி வந்தனர் இந்நிலையில் அந்த இரு ஆசிரியர்களும் விருப்ப மாறுதல் பெற்றுவேறுப்பள்ளிக்கு சென்றுவிட்டனர், ஆசிரியர்களே இல்லாத நிலையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 98 மாணவர்களில் 47 மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர் ஆதலால் மாணவர்கள் நலன் கருதி தொடக்கக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் இதுபோன்ற பள்ளிக்களுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் www.kalviseithiofficial.com
மேற்கண்ட கொரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றிட மதிப்புமிகு ஐயா அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சா.அருணன் நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
நகல் பெறுதல் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.