TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு! Increase in TNPSC Group 4 Vacancies!
குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு!
கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது.
பின்னர், மறு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, 10,117 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானோர் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த எண்ணிக்கை அரசுப் பணி நாடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. 2 ஆண்டுகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு நடைபெறவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு, காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 10,117-ல் இருந்து 10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.