பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை: பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 يونيو 2023

பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை: பள்ளிக்கல்வித்துறை



தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை: பள்ளிக்கல்வித்துறை - Evening classes not compulsory for 10th, 11th, 12th class students writing public exams: Department of Education

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேவைப்படும் மற்றும் விரும்பும் பள்ளிகள் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் எனவும் கூறபட்டுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து 2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 14-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதன் காரணமாக சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இதனிடையே, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில அறிவுத்தல்கள் வழங்கப்பட்டு வருகினறன. குறிப்பாக, பொதுத்தேர்வை சந்திக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது எப்போதும் நடைபெறுவதுதான். தேவைப்படும் மற்றும் விரும்பும் பள்ளிகள் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம். இது கட்டாயமில்லை. அறிவுறுத்தலாகவே முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று கூறினர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.