மாணவர் மனசு அறிய பள்ளிகளில் பெட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 20 يونيو 2023

மாணவர் மனசு அறிய பள்ளிகளில் பெட்டி

மாணவர் மனசு அறிய பள்ளிகளில் பெட்டி Box in schools to learn student mindset

புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளின் பிரச்னை என்னவென விசாரிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர், பெற்றோர், பெற்றோர் -ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் உள்ளிட்டோர் கொண்ட 15 பேர் அடங்கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.

இந்த குழு மாணவர் மனசு பெட்டியில் இடப்படும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து புகாரை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணப்படும்.நடப்பு கல்வியாண்டு, கடந்த 12ம் தேதி துவங்கியது.

ஒரு வாரம் நிறைவு பெற்றுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் பெட்டி வைக்க வேண்டும். கல்வியாண்டு துவங்கும் முன்பாகவே, இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பெட்டியில் சேர்க்கப்பட்ட புகார், அதற்கு காணப்பட்ட தீர்வு குறித்து, ஆலோசனை கூட்டங்கள் வாயிலாக தலைமை ஆசிரியர்களிடம் விபரம் கேட்டறியப்படும் என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.