அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கை மனுவை முழுவதுமாக படித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பதில்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 23 يونيو 2023

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கை மனுவை முழுவதுமாக படித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பதில்கள்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கை மனுவை முழுவதுமாக படித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பதில்கள் - Answers given by the Minister of School Education after reading the request petition of Government Employees Teachers' Welfare Association in its entirety


*நன்றி ! நன்றி !! நன்றி!!!* ~

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்*

*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்*

*கோரிக்கை மனுவை ஒரு வரி விடாமல் முழுவதுமாக படித்து அவர் பதில் அளித்த கோரிக்கைகள்*

*ஆசிரியர்கள் தலைமை ஆசியர்கள் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வு கட்டாயம் என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்ய கேட்டுக்கொண்டதை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோரிடம் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டார் பின்பு அவர்கள் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தனர், மேலும் அமைச்சர் அவர்கள் உடனே மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தினார்* *2009 ம் இடைநிலை ஆசிரியர்க்ளின் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து என்னநிலையில் இருக்கிறது என முதன்மை செயலாளர் அவர்களிடம் கேட்டார் ஆசிரியர் சங்கங்களுடனான குழு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது விரைந்து முடித்து அறிக்கை தருவதாக அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்*

*உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது வைக்கலாம் என இயக்குநர் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் கேட்டார், அதற்கு இயக்குநர் அவர்கள் தங்களிடம் ஒப்புதல் பெற்று இன்னும் ஒருவாரத்தில் கலந்தாய்விற்கான அறிவிப்பு அறிவிக்க உள்ளதாக இயக்குநர் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் தெவித்தார் kalviseithiofficial.com

*ஊர்புற நூலகர்கள் பற்றியும் கேட்டு விரைவு படுத்த கேட்டுக் கொண்டார்*

*ஆசிரியர் பயிற்றுனர்களை கட்டாயத்தின் பேரில் பள்ளிகளுக்கு ஏன் பணி மாறுதல் வழங்க வேண்டும் விருப்பத்தின் பேரில் ஏன் வழங்க கூடாது என இயக்குநர் அவர்களிடம் கேள்வி எழுப்பினார் அப்போது அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது என்றார் அதற்கு அமைச்சர் அவர்கள் குறுக்கிட்டு அவர்கள் தானே விரும்புகின்றனர் என கேட்டு ஆலோசனை செய்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார் ,*

*பழைய மாதிரி உயர்நிலை மேனிலைப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் நிலை குறித்து கேட்டு ஏன் அந்த பள்ளிகளின் பெயரை மாற்றம் செய்து ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய கூடாது என கேட்டார் மேலும்*

*பகுதிநேர சிறப்பாசியர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவருவது அதுவரையில் முழுநேரமாக அறிவித்து மாதம் ரூ .25.000 ஊதியமாக வழங்குதல்* *மேற்படிப்பிற்கான ஊக்க தொகையை மாற்றி தொடர்ந்து ஊக்க ஊதியமாக வழங்குதல்*

*நிறுத்தப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை தொகுத்து நிதி அமைச்சர் அவர்களிடம் அளித்து மிக விரைவில் தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார் kalviseithiofficial.com

*எந்த ஒரு கல்வி அமைச்சரும் இதுவரையில் ஒவ்வொரு சங்க நிர்வாகிகளையும் தனித்தனியே அழைத்து மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நல்லிரவு 12.30 வரை தொடர்ந்து இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு தீர்வுக்காண முயற்சி எடுத்தது இல்லை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்*

*சா.அருணன்*

*நிறுவனத் தலைவர்*

*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

هناك تعليقان (2):

  1. ,ரோம்ப பாராட்டி புகழ் வேண்டாம். சரண்டர் ஊக்க ஊதியம் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்க.அவர்களை போல் நீங்களும் வாயாலே வடை சுட வேண்டாம்.

    ردحذف
  2. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு பற்றி சொல்லவேஇல்லையை அரசு கொள்கைமுடிவு எடுத்தால் என்ன?

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.