அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 27.06.2023 மற்றும் 28.06.2023 சென்னையில் நடைபெறும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 17, 2023

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 27.06.2023 மற்றும் 28.06.2023 சென்னையில் நடைபெறும்

A review meeting for all District Primary Education Officers and District Education Officers will be held on 27.06.2023 and 28.06.2023 at Chennai - சென்னையில் 27, 28ல் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வித்துறை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் -27.06.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் சென்னை. கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுதல் - கூட்ட பொருள் விவரம் கோருதல் சார்ந்து,

பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி செயலர் அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 30.06.2023 மற்றும் 01.072023 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆய்வுக்கூட்டம் 27.06.2023 மற்றும் 28.06.2023 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கலாகிறது. அனைத்து அலுவலர்களும் தங்களது அலகிற்குட்பட்ட கூட்டப் பொருட்களின் விவரங்களை தயாரித்து இணைஇயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களுக்கு Hard Copy வழங்கவும் மற்றும் "பிடி 1" பிரிவிற்கு மின்னஞ்சல் மூலம் gdtsec.dse@gmail.com என்ற முகவரிக்கு 20.06.2023-க்குள் கூட்டப்பொருள் சார்பான விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.