தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - ஆகஸ்ட்-2023 - செய்திக்குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 19, 2023

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - ஆகஸ்ட்-2023 - செய்திக்குறிப்பு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - ஆகஸ்ட்-2023 - செய்திக்குறிப்பு

1. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்

ஆகஸ்ட் 2023-ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.08.2023 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 20.06.2023 பிற்பகல் முதல் 28.06.2023 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Service Centre) நேரில் சென்று online மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

2. தேர்வுக் கட்டண விவரம்

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70/-மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 30.06.2023 மற்றும் 01.07.2023 ஆகிய நாட்களில் தேர்வு கட்டணத்துடன் தட்கல் விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.500/-னை கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 3. விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டியவை

முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் / பள்ளி பதிவுத்தாள் நகல் / பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்

• ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின்/சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

. ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால்

4 மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 5. இத்தேர்விற்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இணைப்பு : தேர்வு கால அட்டவணை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.