நாடு முழுவதும் 150 மருத்துவ கல்லூரிகளுக்கு சிக்கல்? அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 1 يونيو 2023

நாடு முழுவதும் 150 மருத்துவ கல்லூரிகளுக்கு சிக்கல்? அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்!



நாடு முழுவதும் 150 மருத்துவ கல்லூரிகளுக்கு சிக்கல்? அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்! Problem-for-150-medical-colleges-across-the-country

புதுடில்லி: போதிய வசதிகள் இல்லாதது மற்றும் விதிகளை கடைபிடிக்காத காரணங்களுக்காக நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்த நிலையில், மேலும் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைகள் போன்றவற்றில், தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்து, அங்கீகாரத்தை புதுப்பித்து வருகிறது. அப்போது, மருத்துவமனை உட்கட்டமைப்பு, மருத்துவக் கல்லூரி வளாகம், பேராசிரியர்கள் பணியிடம், மாணவர்களின் வருகைப்பதிவு, ஆய்வக வசதிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டை ஆய்வு செய்யப்படுகின்றன.

இவ்வசதிகள் அடிப்படையில் கூடுதல் மருத்துவப் படிப்புக்கான இடங்களும் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறியதால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் இந்தாண்டுக்கு ரத்து செய்தது.

அந்த வகையில் நாடு முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் 150 மருத்துவக் கல்லூரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.