RTE - நாளை தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 22 مايو 2023

RTE - நாளை தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை

நாளை தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை - RTE - Admissions in private schools through lottery tomorrow -

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை செவ் வாய்க்கிழமை (மே 23) நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதிவெளி யிட்ட செய்தி: இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி சமூகத்தில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின ரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் வகையில் 25 சத வீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 653 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வரும் கல்வி யாண்டுக்கான(2023-24) மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஏற்கெ னவே பெறப்பட்டன.

அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட 648 பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை செவ்வாய்க்கிழமை (மே 23) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.