அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 22 مايو 2023

அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

Admission to Government Arts Colleges: Application registration ends today - அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

சென்னை, மே 21: அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான அவகா சம் திங்கள்கிழமையுடன் (மே 22) நிறைவு பெறுகிறது.

இதுவரை 2.90 லட்சம் பேர் விண்ணப்பப் பதிவு செய்திருப்ப தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இள நிலை படிப்புகளில் 1,07,395 இடங்கள் உள்ளன.

அதற்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2,90,973 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2,36,677 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் திங்கள்கிழமை யுடன் (மே 22) நிறைவு பெறுகிறது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப் பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அந்த இணையப் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூ ரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.