இந்திய அஞ்சல்துறையில் வேலை.. 12,828 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி: 11.06.23 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 10, 2023

இந்திய அஞ்சல்துறையில் வேலை.. 12,828 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி: 11.06.23



'Gramin Dak Sevak (GDS) Online Engagement-Special Gycle, May,2023

Online applications are invited from the eligible applicants for engagement as Gramin Dak Sevaks (GDS) [Branch Postmaster (BPM)/Assistant Branch Postmaster (ABPM)I in Branch Post Offices (BOs) created in the year 2023. Applications are to be submitted online at www.indiapostgdsonline.gov.in. Details of the vacant posts are given in Annexure-!.

இந்திய அஞ்சல்துறையில் வேலை.. 12,828 பணியிடங்கள். - Jobs in India Post Department.. 12,828 Vacancies - Last Date to Apply: 11.06.23

நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை தபால் நிலையங்களில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள்: போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர்.

மொத்த காலியிடங்கள்: 12,828 கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.

ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி.

உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதியாக கணினியறிவு, சைக்கிள் ஓட்டத் தெரிந்திக்க வேண்டும்.

வயதுவரம்பு: இப்பணிகளுக்கு 18 முதல் 40 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைகளின் படி வயதுவரம்பு தளர்வும் அளிக்கப்படும்.

சம்பள விவரம்: கிளை போஸ்ட் மாஸ்டர் - 12,000

உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் - 10,000



தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற இணையதள முகவரில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு:

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_20052023_GDS_Eng.pdf என்ற இணையதளம் முகவரியை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.23

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.