ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை இ-சேவை மையத்தில் இனி பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 16 مايو 2023

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை இ-சேவை மையத்தில் இனி பதிவிறக்கம் செய்யலாம்



இ-சேவை மையங்களில் டெட் தேர்ச்சி மறுபிரதி சான்றிதழ் பெறலாம் - Candidates who have cleared the Teacher Eligibility Test can now download the certificate from the e-Service Center

சென்னை: டெட் தேர்ச்சி மறுபிரதி சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் (தகுதித் தேர்வு) மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2012, 2013, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1, தாள்-2) தேர்ச்சி சான்றிதழ்களின் மறுபிரதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால்வழங்கப்பட்டு வருகிறது.

இனிமேல் மறுபிரதி சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக வழங்க இருப்பதால் அச்சான்றிதழ் கோரி வரும் விண்ணப்பங்களை தேர்வுவாரியத்துக்கு அனுப்ப வேண்டாம் என மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே, மறுபிரதி சான்றிதழ்கள் கோரும் விண்ணப்பதாரர்களை இ-சேவை மையத்தை அணுகி மறுபிரதி கட்டணத் தொகை ரூ.200 மற்றும் இ-சேவை மைய சேவை கட்டணம் ரூ.50 (மொத்தம் ரூ.250) செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தும்படி முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.