டிப்ளமோ பட்டதாரிகளின் மனு தள்ளுபடி; ஐஎம்ஏ பரிந்துரையின்றி கிளினிக் நடத்த அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சமூக மருத்துவ சேவை மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கான டிப்ளமோ பட்டதாரிகள் சார்பில், கணேசன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் ஆரம்ப சுகாதார கிளினிக் நடத்தி வருகிறோம். ஆனால், தமிழக அரசும், போலீஸாரும் எங்கள் அன்றாடப் பணிகளில் தலையிட்டு, நாங்கள் கிளினிக் நடத்துவதை தடுக்கின்றனர். நாங்கள் ஆரம்ப சுகாதார கிளினிக் நடத்துவதை தடுக்க கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில், ‘தமிழ்நாடு கிளினிக் நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, அரசின் அனுமதியின்றி கிளினிக் நடத்த முடியாது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்று, அதை சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்திருந்தால் மட்டுமே கிளினிக் நடத்த முடியும்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, ‘‘இந்திய மருத்துவ கவுன்சில் (ஐஎம்ஏ)அல்லது ஆயுஷ் துறையின் பரிந்துரை இல்லாமல் கிளினிக் நடத்த மனுதாரர்களுக்கு உரிமை இல்லை’’ என்று கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.