ஆசிரியர் சங்கங்களை வளைத்து புது கூட்டமைப்பு திமுக அதிரடியால் ஜாக்டோ- ஜியோ கொந்தளிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 3, 2023

ஆசிரியர் சங்கங்களை வளைத்து புது கூட்டமைப்பு திமுக அதிரடியால் ஜாக்டோ- ஜியோ கொந்தளிப்பு

உடைச்சுட்டாங்க ஆசிரியர் சங்கங்களை வளைத்து புது கூட்டமைப்பு திமுக அதிரடியால் ஜாக்டோ- ஜியோ கொந்தளிப்பு



புதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சாண்டர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே தேதியில் இருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். உயர் தொகுப்பூதியத் ஊழியர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைய வேண்டும். தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்ட மைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பை உடைக்கும் முயற்சியாக ஆசிரியர்கள் சங்கங்களை இணைத்து தனியாக ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசு இருப்புதாக ஜாக்டோ - ஜியோ குற்றம்சாட்டுகிறது..

இது குறித்து தமிழ்நாடு ஆசிரி யர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தியாகராஜனிடம் கேட்ட போது, "இது முழுக்க முழுக்க ஆசிரியர்கள் தொடர்பான பிரச் னையை அரசுக்கு எடுத்துச் செல்ல ஆரம்பிக்கப்பட்டது. ஆசிரியர்க ளுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தே இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். எங்கள் கூட் டமைப்பு எந்த வகையிலும் ஜாக்டோ – ஜியோவுக்கு எதிராக செயல்படாது. நிதி நிலைமையை பொறுத்து படிப்படியாக திட்டங் கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தார். பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.