வட்டார கல்வி அலுவலர் (BEO) கைது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 2 أبريل 2023

வட்டார கல்வி அலுவலர் (BEO) கைது!

கோயிலில் விநாயகர் கற்சிலையை திருடிய - வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டு கோட்டை அருகே குறிச்சி கிராமத் தில் உள்ளபழமையானகாசிவிஸ்வ நாதர் கோயிலில் உள்ள விநாயகர் கற்சிலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருடு போனது. இதையடுத்து, கோயில் சிலை திருட்டு தொடர்பாக, கரம் பயம் மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் சக்திவேல் அளித்தபுகா ரின்பேரில், வாட்டாத்திக் கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பாப்பாநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரவேல் தலைமையிலான தனிப்படை போலீஸார், குறிச்சி காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அந்த ஊரில் ஏற்கெ னவே அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி யவரும் தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவருமான சி.செல்லத் துரை(59) இருசக்கர வாகனத்தில் விநாயகர் கற்சிலையை திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து, பட்டுக் கோட்டையில் தனது மகளின் வீட் டில் உள்ள செல்லத்துரையை போலீஸார் நேற்று கைது செய்து, திருடிய சிலையையும் மீட்டனர். குறிச்சி நடு நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது. ஊரில் உள்ள சிலருடன் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்லதுரை, கோயில் சிலையை திருடி சென்றால், அந்த ஊரில் திருவிழா தடைபடும் என்பதால் சிலையை திருடியதாக தெரியவந்துள்ளது,
CLICK HERE TO READ FULL NEWS

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.