2023-24 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடக்க விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 16 أبريل 2023

2023-24 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடக்க விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு



2023-24 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடக்க விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு - 2023-24 Admission Commencement Ceremony - Press Release from the Commissioner of School Education

பத்திரிகையாளர் அழைப்பு

2023-24 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடக்க நிகழ்வு

இடம் : அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஜி.கே.எம்.காலனி, கொளத்தூர், சென்னை

நாள்: 17.04.2023 காலை 8.45 மணி

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் முன்னெப்போதுமில்லாத பல திட்டங்கள் மாணவர்களின் நலனுக்கென வகையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொது மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளும் பரப்புரையை பள்ளிக் கல்வித் துறை முன்னெடுக்கவுள்ளது இந்தப் பரப்புரையின் தொடக்க நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்கிறார். சென்னை கொளத்தூரில் ஜி.கே.எம். காலனியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டின் (2023-24) முதல் மாணவர் சேர்க்கை அமைச்சரின் முன்னிலையில் நடைபெற உள்ளது. பரப்புரை வாகனத்தின் பயணத்தை அமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். நிகழ்வில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள் பங்கேற்கிறார்.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பள்ளிக் கல்வித் துறையின் உயர் அலுவலர்களும் பங்கேற்கிறார்கள்.

நிகழ்விற்கு தங்கள் செய்தி நிறுவனத்தில் இருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.