கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி - செய்தி வெளியீடு:049 - நாள்.12.04.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 12, 2023

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி - செய்தி வெளியீடு:049 - நாள்.12.04.2023

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி

செய்தி வெளியீடு:049 நாள்.12.04.2023

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை

பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக்கட்டடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கவேண்டும்.

தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவுசெய்யப் பட்டிருக்கவேண்டும்.

தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும்.

தேவாலயத்தின் சீரமைப்புப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

சீரமைப்புப் பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்குப் பின்னரே வழங்கப்படும்.

மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் .

1) தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal

2) கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities)

3) குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities)

தேவலாய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்

1) 10 -15 வருடம் வரை இருப்பின் ரூ.1.00 இலட்சத்திலிருந்து 2.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2) 15- 20 வருடம் வரை இருப்பின் ரூ.2.00 இலட்சத்திலிருந்து 4.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

3) 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ.3.00 இலட்சத்திலிருந்து 6.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்டமதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் புலத்தணிக்கைக்கு பின்னர் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்

விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw.tn.gov.in என்ற

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பபப்படிவத்துடன் தேவாலயம், மற்றும் தேவாலய கட்டடம் பதிவு செய்தமைக்கான பதிவு ஆவணம், வரைபடம், திட்ட மதிப்பீடு, கட்டடத்தின் ஸ்திரத்தன்மை (Stability Certificate Form A,B,C &E), தேவாலயம் சுயாதீனம் (Independent) வகையாயிருப்பின் அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்ற சான்று, தேவாலய வங்கி பாஸ் புத்தக நகல் இணைக்கப்படவேண்டும்.

செய்தி வெளியீடு :

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.