TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு - மாவட்ட வாரியான முடிவுகள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 9, 2023

TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு - மாவட்ட வாரியான முடிவுகள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது!

TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு - மாவட்ட வாரியான முடிவுகள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது!

பள்ளிக்கல்வி- 2022-23 ஆம் கல்வி ஆண்டு- தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு - டிசம்பர் 2022 (TRUSTE) - - தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் அனுப்புதல் -சார்பு.

பார்வை:

1.அரசாணை (நிலை) எண்:960, கல்வித்துறை நாள்:11.10.1991 2. சென்னை, அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் எண்:021213/டி(1)/2022, நாள்:28.02.2023

பார்வை 2-ல் கண்ட சென்னை, அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் மூலம் 17.12.2022 அன்று நடைபெற்று முடிந்த ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUSTE) தொடர்பான தேர்வு முடிவுகள் (சென்னை நீங்கலாக) 37 வருவாய் மாவட்டம் வாரியாக ஆண்கள் Top 50 மற்றும் பெண்கள் Top 50 வீதம் தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUSTE) முடிவினை அனைத்து மாணவர்களுக்கும் தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: ஊரகத்திறனாய்வுத் தேர்வு தேர்வர்கள் விவரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.