நான் முதல்வன் Techshowcase 2023 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, "Innovations and intelligence for Computing and Technologies" என்ற புத்தகத்தை வெளியிட்டார் திரு. உதயநிதி ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 25, 2023

நான் முதல்வன் Techshowcase 2023 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, "Innovations and intelligence for Computing and Technologies" என்ற புத்தகத்தை வெளியிட்டார் திரு. உதயநிதி ஸ்டாலின்



நான் முதல்வன் Techshowcase 2023 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, "Innovations and intelligence for Computing and Technologies" என்ற புத்தகத்தை வெளியிட்டார் திரு. உதயநிதி ஸ்டாலின்

செய்தி வெளியீடு எண்‌ : 614 நாள்‌ : 25.03.2023

செய்தி வெளியீடு

மாண்புமிகு இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று 25.03.2023 சென்னை வர்த்தக மையத்தில்‌ நடத்தப்படும்‌ தொழில்நுட்பம்‌, தொழில்முனைவோர்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டு உச்சிமாநாட்டின்‌ நிறைவு நாள்‌ விழாவில்‌ கண்காட்சியினை: பார்வையிட்டு, நான் முதல்வன் Techshowcase 2023 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, "Innovations and intelligence for Computing and Technologies" என்ற புத்தகத்தை வெளியிட்டார் திரு. உதயநிதி ஸ்டாலின்

மாண்புமிகு இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ சிறப்புரையாற்றி பேசியதாவது. பொருளாதார வளர்ச்சியிலும்‌ முன்னேற்றத்திலும்‌ தொழில்நுட்பத்தின்‌ பங்களிப்பைக்‌ கொண்டாடும்‌ இந்த முக்கியமான மேடையில்‌ நான்‌ பங்கேற்பதைப்‌ பெருமையாகக்‌ கருதுகிறேன்‌. மாண்புமிகு அமைச்சர்கள்‌ பலரும்‌ குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாட்டில்‌ டிரில்லியன்‌ டாலர்‌ பொருளாதாரம்‌ என்ற இலக்கை எட்டுவதில்‌ தொழில்நுட்பம்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை வடிவமைக்கும்‌ கடமை நம்முடைய இளைய சமூகத்திடம்‌, அதாவது நம்‌ அனைவரிடமும்‌ உள்ளது! எதிர்காலத்தைப்‌ பார்க்கையில்‌, இந்தியாவுக்கான நிலையான மற்றும்‌ அனைவரையும்‌ உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுத்துச்‌ செல்ல நமக்குச்‌ சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா, குறிப்பாகத்‌ தமிழ்நாடு இளைஞர்களின்‌ உழைப்புச்‌ சக்தியால்‌ ஆசீர்வதிக்கப்பட்டது. அடுத்துவரும்‌ பத்தாண்டுகளில்‌, உலகின்‌ உழைக்கும்‌ வயது கொண்ட மக்கள்தொகையில்‌ சுமார்‌ 20 சதவிதமாக நாம்‌ இருப்போம்‌. ஆனால்‌, இதில்‌ நம்‌ அனைவருக்கும்‌ பொறுப்பு இருக்கிறது.

அடுத்து வரும்‌ 25 ஆண்டுகளில்‌, இந்திய இளைஞர்களுக்கென 22 கோடிக்கும்‌ அதிகமான வேலைவாய்ப்புகளை நாம்‌ உருவாக்க வேண்டியுள்ளது. புதிய திறன்களும்‌ செயஜூக்கமும்‌ தேவைப்படும்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ டிஜிட்டல்‌ துறைகளில்‌ உள்ள

வேலைவாய்ப்புகளையும்‌ இது உள்ளடக்கியது. இந்த சவாலை நாம்‌ வெற்றிகரமாக எதிர்கொண்டோம்‌ என்றால்‌, ஒட்டுமொத்த மக்களையும்‌ வறுமைக்கோட்டுக்கு மேலே கொண்டுவருவதில்‌ நம்மால்‌ முக்கியப்‌ பங்காற்ற முடியும்‌. லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை: உருவாக்குவதில்‌ தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத்‌ திகழ்கிறது. தொலைநோக்குப்‌ பார்வை கொண்ட நம்முடைய தலைவர்‌ டாக்டர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ தொடங்கப்பட்ட தொழில்நுட்பத்‌ துறையில்‌ மேற்கொள்ளப்பட்டுள்ள மகத்தான நடவடிக்கைகளுக்கு நன்றி. இந்தியாவிலேயே முதன்முதலாக 1996 ஆம்‌ ஆண்டு டாக்டர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ மாநிலத்‌ தகவல்‌ தொழில்நுட்பக்‌ கொள்கையை அறிமுகப்படுத்தினார்‌. பின்னர்‌, இது ஒன்றிய அரசாலும்‌ பின்பற்றப்பட்டது. 1996 ஆம்‌ ஆண்டு தமிழ்நாட்டுக்குள்‌ கணினிம௰மாக்கலைக்‌ கொண்டுவந்து கணினிப்‌ பயன்பாட்டையும்‌ கல்வியையும்‌ பரப்புவதில்‌ கலைஞர்‌ முன்னோடியாகத்‌ திகழ்ந்தார்‌. இதன்‌ விளைவாக, மென்பொருள்‌ ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நுழைவுத்‌ தேர்வுகளை கலைஞர்‌ ரத்து செய்த காரணத்தால்‌, கிராமப்புற மற்றும்‌ பின்தங்கிய சமூகங்களைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌ சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவெடுக்கவும்‌, அவர்களை உலக அரங்கில்‌ நிலைநிறுத்தவும்‌ இது பெரிய வாய்ப்புகளைத்‌ திறந்துவிட்டது.

டாக்டர்‌ கலைஞர்‌ தலைமையில்‌ தி.மு.க. அரசு 1999 இல்‌ சென்னையில்‌ டைடல்‌ பூங்காவை நிறுவியது. கலைஞர்‌ அவர்களின்‌ தொலைநோக்குப்‌ பார்வையால்‌, ராஜீவ்‌ காந்தி சாலையானது தகவல்‌ தொழில்நுட்பப்‌ பெருந்தடமாக உருவெடுத்துள்ளது. தற்போது. இங்கே ஏறக்குறைய 4,000 தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனங்களும்‌ தகவல்‌ தொழில்நுட்ப சேவை நிறுவனங்களும்‌ உள்ளன.

தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற சிறப்புகள்‌ உள்ளன. நாட்டின்‌. இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும்‌. வேகமாக வளர்ந்துவரும்‌ பொருளாதாரமாகவும்‌ நாம்‌ இருக்கிறோம்‌. உயர்நிலைக்‌ கல்விக்கான. மாணவர்‌ சேர்க்கை விகிதத்தில்‌ தமிழ்நாடு மூன்றாவது இடத்தில்‌ உள்ளது. விளைவாக, நம்மிடம்‌ திறமையான இளைஞர்கள்‌ உள்ளனர்‌. நம்முடைய பெண்‌ தொழிலாளர்களின்‌ பங்கேற்பு கிட்டத்தட்ட 4௦ சதவீதமாக உள்ளது. இது உலக சராசரிக்கு அருகே உள்ளது. இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம்‌. மாணவிகள்‌ உயர்கல்வி பயில்வதை உறுதிசெய்யவும்‌, அவர்கள்‌ பணிக்குச்‌ செல்வதை ஊக்குவிக்கும்‌ விதமாகவும்‌ நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ திறமையான தலைமையின்கீழ்‌, புதுமைப்‌ பெண்‌ திட்டத்தை நம்முடைய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத்‌ திட்டத்தின்‌ மூலம்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ படிப்பை முடித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம்‌ ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால்‌, 1.15 லட்சம்‌ மாணவிகள்‌. பயனடைகின்றனர்‌.

இளைஞர்களை ஆதரிப்பதற்கும்‌. நம்முடைய நாட்டின்‌ முழுத்‌ திறனையும்‌. உணர்வதற்கும்‌ நாங்கள்‌ பல. முயற்சிகளை எடுத்துவருகிறோம்‌. நவின டிஜிட்டல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கட்டமைப்பை அமைத்தல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த கல்வியை நம்‌ பள்ளிகளில்‌ வழங்குதல்‌. செயற்கை நுண்ணறிவு. மென்பொருள்‌ சேவை வழங்குதல்‌, இன்ன பிற இணையம்‌ சார்ந்த விஷயங்கள்‌ போன்றவற்றில்‌ இளைஞர்களுக்கான திறனை மேம்படுத்துதல்‌ ஆகியவை இதில்‌ அடங்கும்‌.

திறன்வாய்ந்த தொழில்நுட்ப மனித வளங்களை உருவாக்குவதற்கென நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ 'நான்‌ முதல்வன்‌! என்ற சிறப்புத்‌ திட்டத்தைத்‌ தொடங்கியுள்ளார்‌. இதன்‌ வழியாக, மாணவர்களுக்குத்‌ தொழில்நுட்பப்‌ பயிற்சிகளையும்‌, மென்திறன்‌ பயிற்சிகளையும்‌ வழங்குகிறோம்‌. மாநிலத்திலுள்ள எல்லாக்‌ கல்வி நிறுவனங்களையும்‌ உள்ளடக்கியதாக இதை நாம்‌ திட்டமிடுகிறோம்‌. இந்த நிதியாண்டில்‌, நான்‌ முதல்வன்‌! திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்‌ என்று மாநில அரசு தன்னுடைய பட்ஜெட்டில்‌ அறிவித்தது. தற்போது, பொறியியல்‌, கலை & அறிவியல்‌ கல்ஜூரிகளைச்‌ சேர்ந்த சுமார்‌ 13 லட்சம்‌ மாணவர்களுக்கு இந்தத்‌ திட்டத்தின்கீழ்‌ பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. மேலும்‌, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்‌ (11101) வழியாக 570-க்கும்‌ மேற்பட்ட பொறியியல்‌ கல்லூரிகளின்‌ கல்வி வலைப்பின்னலைக்‌ கொண்ட ஸ்டார்ட்‌அப்‌ நிறுவனங்களின்‌ சூழலை மேம்படுத்திவருகிறோம்‌. ஆராய்ச்சியாளர்களுடனும்‌ தொழில்‌ துறையினருடனும்‌. இணைந்து எதிர்காலத்துக்குப்‌ பாதை அமைத்துவருகிறோம்‌. பல்வேறு பகுதிகளையும்‌ தளங்களையும்‌ சேர்ந்த திறமையாளர்களை ஒருங்கிணைத்திருக்கும்‌ மிக முக்கியமான நிகழ்ச்சி இது. இளைஞர்களின்‌ பங்கேற்பை ஊக்குவிப்பது, அவர்கள்‌. தங்களுடைய புதுமையான யோசனைகளை வவளிப்படுத்துவது, பல்வேறு துறைகளில்‌ சிறந்து விளங்கும்‌ நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஆகியவை இந்த யுமாஜின்‌ தொழில்நுட்ப மாநாட்டின்‌ முக்கிய அம்சமாகும்‌.

இந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்தி நீங்கள்‌ அனைவரும்‌ புதிய யோசனைகளையும்‌ வணிகங்களையும்‌ உருவாக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌. 1504 நிறுவனங்கள்‌, 320 பேச்சாளர்கள்‌, நான்கு பிரிவுகளின்‌ கீழ்‌ 1204 அமர்வுகள்‌ மற்றும்‌ உலகம்‌ முழுவதிலுமிருந்து 10,0004 பேர்‌ பங்கேற்று இந்த மூன்று நாள்‌ நிகழ்ச்சியை நடத்தியதற்காக அரசுக்கு நான்‌ நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்‌. தமிழ்நாட்டின்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த வளர்ச்சியின்‌ முக்கியத்‌ தளமாக யுமாஜின்‌ விளங்கும்‌. இந்த மாநாடு உலகெங்கிலுமுள்ள புதுயுகத்‌ தொழில்முனைவோர்களையும்‌. முதலீட்டாளர்களையும்‌. தொழில்நுட்ப வல்லுநர்களையும்‌, கொள்கை வகுப்பாளர்களையும்‌, கல்வியாளர்களையும்‌ ஒன்றிணைத்திருக்கும்‌ என்று நம்புகிறேன்‌. இது தமிழ்நாட்டின்‌: வளர்ந்துவரும்‌ தொழில்நுட்பச்‌ சூழலையும்‌ புத்தாக்கச்‌ சூழலையும்‌ வெளிப்படுத்தும்‌ என்று நான்‌ நம்புகிறேன்‌.

இவ்விழாவில்‌ மாண்புமிகு தகவல்‌ தொழில்‌ நுட்பவியல்‌ மற்றும்‌. எண்மய சேவைகள்‌ துறை அமைச்சர்‌ திரு. த. மனோ தங்கராஜ்‌ அவர்கள்‌, தமிழ்நாடு தொழிமுதலீட்டு கழகத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ மேலான்மை இயக்குநர்‌/கூடுதல்‌ தலைமை செயலாளர்‌ திரு. ஹன்ஸ்ராஜ்‌ வர்மா இ.ஆப, தமிழ்நாடு தகவல்‌ தொழில்நுட்பவியல்‌ மற்றும்‌ எண்மய சேவைகள்‌ துறைச்‌ செயலாளர்‌ திரு. ஜெ. குமரகுரபரன்‌ இ.ஆய., தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின்‌ (எல்காட்‌) மேலாண்மை இயக்குநர்‌ திரு.ஜான்‌ ஜூயிஸ்‌ ஆய. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. டி.ஆர்‌.பி. ராஜா . இந்திய மென்பொருள்‌ தொழில்நுட்ப பூங்கா இயக்குநர்‌, முனைவர்‌ சஞ்சய்‌ தியாகி. டெய்ம்லர்‌ இந்தியா மேலான்மை இயக்குநர்‌/முதன்மை செயல்‌ அலுவலர்‌ திரு சத்தியக்கம்‌ ஆர்யா மற்றும்‌ தமிழக தகவல்‌ தொழிட்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்‌ திரு. கெவின்‌ ஜார்ஜ்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌. CLICK HERE TO DOWNLOAD 1

CLICK HERE TO DOWNLOAD 2

CLICK HERE TO DOWNLOAD 3

CLICK HERE TO DOWNLOAD 4

CLICK HERE TO DOWNLOAD 5

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.