பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - The State Planning Director ordered to release about Rs. 9.22 crores for the purchase of A4 sheets required for conducting quizzes in schools!

2022-23ல் மதிப்பீட்டுப்புலம் (Assessment Cell) வாயிலாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் வாயிலாக வினாடிவினா நடத்திடத் தேவையான A4 sheet பேப்பர்கள் வாங்குதல் சார்ந்து நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென EMIS தரவு தளத்தில் தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகுப்பு மற்றும் பள்ளிவாரியாக வினாத்தாள்கள் அச்சிட தேவையான A4 sheet பேப்பர்கள் மற்றும் அதற்கு தேவைப்படும் நிதியும் கணக்கிடப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மேற்காணுமாறு நிதியினை விடுவிக்க அனுமதி வேண்டப்படுகிறது

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலின் படி பள்ளிவாரியாக நிதியினை விடுவித்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் உரிய விதி முறைகளை பின்பற்றி A4 sheet பேப்பர்கள் வாங்கவும் பயன்பாடு விவரங்களை உரிய பதிவேட்டில் பராமரிக்கவும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு: பள்ளிவாரியாக தேவைப்படும் A4 sheet பேப்பர்கள் மற்றும் விடுவிக்கப்படும் நிதி விவரம் 2022-23.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.