ஜாக்டோ ஜியோ (05.03.2023) போராட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கமும் ஆதரவு... ஒன்றினைந்து போராடவும் முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 1 مارس 2023

ஜாக்டோ ஜியோ (05.03.2023) போராட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கமும் ஆதரவு... ஒன்றினைந்து போராடவும் முடிவு

தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கமும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்பு...
தமிழ் நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு TAMIL NADU SURVEY OFFICERS' UNION (CENTRAL)
அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்,
அரசு ஊழியர் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடவும், நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பை விடுவித்திடவும், உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படியை நிலுவையின்றி வழங்கிடவும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக படித்த இளைஞர்களை கொண்டு பூர்த்தி செய்திடவும், அரசுத் துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிடவும் கோரி தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ எனும் பேரமைப்பு தொடர்ந்து இயக்கம் நடத்தி வருகிறது. இவ்வமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினராக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது. வருகிற மார்ச் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறுகிற ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பங்கேற்கிறது. ஒன்றிப்பின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் நம்முடைய ஜீவாதாரக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக உண்ணாவிரத போராட்டத்தில் முழுவதுமாக பங்கேற்க வேண்டும் என்று மாநில மையத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.