ஜாக்டோ ஜியோ (05.03.2023) போராட்டத்திற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போரட்டக்குழு ஆதரவு... ஒன்றினைந்து போராடவும் முடிவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 1 مارس 2023

ஜாக்டோ ஜியோ (05.03.2023) போராட்டத்திற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போரட்டக்குழு ஆதரவு... ஒன்றினைந்து போராடவும் முடிவு.



அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போரட்டக்குழு Legal Coordination Committee for Govt Doctors

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் அரசாணை 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டி நீண்டகாலமாக போராடி வருகிறோம். ஏற்கனவே உறுதியளித்தவாறு திமுக ஆட்சி அமைந்ததும், அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மிகுந்த எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தோம். இருப்பினும் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதற்கிடையே போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் சங்க நிர்வாகிகளுக்கு, அரசு 17 பி குற்ற குறிப்பாணை கொடுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வென்றெடுக்க தங்களின் ஆதரவை வேண்டுகிறோம். இந்த நிலையில் வருகின்ற மார்ச் 5 ம் தேதி பழைய ஓய்வூதியம் வேண்டி ஜாக்டோ - ஜியோ நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அரசு மருத்துவர்கள் முழு ஆதரவு தருவதோடு, அப்போராட்டத்தில் அரசு மருத்துவர்களும் திரளாக பங்கேற்று, போராட்டம் மாபெரும் வெற்றி பெற செய்வோம். மேலும் இதற்குபின் தொடர்ந்து ஜாக்டோ - ஜியோ உடன் இணைந்து செயல்படுவது எனவும் எங்கள் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.