பள்ளிக் கல்வி ஆய்வுக் கூட்டம்: இன்று தொடக்கம் School Education Review Meeting: Starts Today - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 مارس 2023

பள்ளிக் கல்வி ஆய்வுக் கூட்டம்: இன்று தொடக்கம் School Education Review Meeting: Starts Today

பள்ளிக் கல்வி ஆய்வுக் கூட்டம்: இன்று தொடக்கம்

சென்னை, மார்ச் 28: சென்னையில் இரு நாள்கள் நடைபெறவுள்ள பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் புதன்கிழமை தொடங்கவுள்ளது.

இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக இந்தக் கூட்டம் மார்ச் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர் வாக காரணங்களால் செவ்வாய்க்கிழமை கூட்டம் ரத்து செய்யப் பட்டு, இரு நாள்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாணவர்களின் வருகைப் பதிவு, இடைநிற்றல் என பல் வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும், அடுத்த கல்வியாண்டுக்கான (2023-2024) மாணவர் சேர்க்கை, பொதுத் தேர்வு வினாத்தாள் திருத்தம், தேர்வில் பங்கேற் காத மாணவர்களைக் கண்டறிதல், பள்ளிக் கல்வி மானியக் கோரிக் கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப் படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.