மாணவரை அவமானப்படுத்தியதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 25, 2023

மாணவரை அவமானப்படுத்தியதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்



மாணவரை அவமானப்படுத்தியதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

ராசிபுரம் அருகே 3ம் வகுப்பு அரசு தொடக்கப்பள்ளி மாணவரை முட்டிப்போட வைத்து அவமா னப்படுத்தியதாக ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறை நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளார். ராசிபுரம் அருகேயுள்ள போடி நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளியில் ஆசி ரி யராக இருப்பவர் மணிகண்டன் ( 54). இவர் கடந்த மார்ச்.16 அன்று அருகேயுள்ள தொட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர் களுக்கு ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக பாடம் நடத்துவதற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அப்பள்ளியில் 3ம் வகுப்பு மாணவர்களை திண்பண்டம் வாங்க கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 3ம் வகுப்பு மாணவர் பரணீஸ் என்பவ ரும் சக மாணவர்களுடன் கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவரை ஆசிரியர் மணிகண்டன் கண் டித்து திட்டியுள்ளார். மேலும் முட்டி போடவைத்து, மாணவரின் சர்ட் பாக்கெட்டில் திண்பண்டங்களின் காகித கழிவுகளை வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர் பெற்றோரிடம் கூறியதையடுத்து, சந்திரசேகரபுரம் நேரு நகரை சேர்ந்த மாணவரின் தாய் ஜீவா ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் கல்வித்துறை உயர் அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஆசிரியர் மணிகண்டன் தொடக்கக் கல்வித் துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.