New Bharat Literacy Scheme - புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடந்த தேர்வில் 5 லட்சம் பேர் பங்கேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 19 مارس 2023

New Bharat Literacy Scheme - புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடந்த தேர்வில் 5 லட்சம் பேர் பங்கேற்பு



5 lakh people participated in the examination held in Tamil Nadu under the New Bharat Literacy Scheme - தமிழ்நாடு பள்ளி சாராமற் றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 15 வய துக்கு மேற்பட்ட, எழுதப் படிக்க தெரியாத வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங் கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் தமிழ கத்தில் சிறப்பாக செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் 5 லட்சத்து 28 ஆயிரம் எழுத்தறிவற்றவர் கள் கல்வி கற்று வருகின்ற னர். அதற்காக 28 ஆயிரம் மையங்கள் அமைக்கப் பட்டு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன.

இதையடுத்து இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள அனைவருக்கும் 19ம் தேதி அடிப்படை எழுத்தறி வுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்க அறி விக்கப்பட்டது.

இதன்படி இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டகற்போர் மையங்கள், வட்டார வள மையங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங் களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | 10-ம் வகுப்பு அறிவியல் பாட செயல்முறை தேர்வு இன்று தொடங்குகிறது
மேற்கண்ட அறிவிப் பின்படி தமிழ்நாட்டில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் அடிப்படை எழுத்தறிவு தேர்வு எழுத பதிவு செய் தனர். அவர்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இதற்காக 28 ஆயிரத்து 848 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டு, அதில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேர் தேர்வு எழு தினர். அதில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 664 பேர் பெண் கள், 1லட்சத்து 74 ஆயிரத்து 183 பேர் ஆண்கள், மாற்றுப் பாலினத்தோர் 153 பேர் அடங்குவர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.