ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தல் மற்றும் பணிப்பாதுகாப்புச் சட்டம் கோருதல்- சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 23 مارس 2023

ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தல் மற்றும் பணிப்பாதுகாப்புச் சட்டம் கோருதல்- சார்பு

தூத்துக்குடி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தல் மற்றும் பணிப்பாதுகாப்புச் சட்டம் கோருதல்- சார்பு

இன்று தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியம், கீழநம்பிபுரம் தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் திருமதி.குருவம்மாள், திரு.பரத் ஆகிய ஆசிரியர்கள் மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலை தேசிய ஆசிரியர் சங்கம் . தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

அந்த ஆசிரியர்கள் செய்த குற்றம் அவர்கள் குழந்தையை அடித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உரிய இடத்தில் புகார் அளிக்காமல் கொலை வெறி தாக்குதல் நடத்துவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று தாய் தந்தையருக்கு அடுத்தபடியாக தெய்வத்திற்கு முன்பாக வணங்கப்பட வேண்டியவர் ஆசிரியர். ஆனால் தற்போதைய சூழலில் ஆசிரியருக்கான மதிப்பு இச்சமுதாயத்தில் குறைந்து மிகவும் கீழான நிலையில் விமர்சனங்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஆளாகயிருப்பது தேசத்திற்கும், சமுதாயத்திற்கும், நம் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்றி ஒட்டு மொத்த மாநிலத்தின் மாண்பைக் காக்க, மாணவர்களை சிறந்த எதிர்காலக் குடிமகன்களாக உருவாக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.