தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கு 30ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: TNPSC செயலாளர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 مارس 2023

தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கு 30ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: TNPSC செயலாளர் அறிவிப்பு

தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கு 30ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வி துறை) மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பதவிகளுக்கு எழுத்து தேர்வு கடந்த 12.11.2022 மற்றும் 13.11.2022 நடைபெற்றது. எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 15ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 30ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரரின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல், காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.