உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை:அரசு பள்ளிகளில் உடற்கல்வி பணியில், 2,900 காலியிடங்களை நிரப்பக்கோரி, சென்னையில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில், மாநில தலைவர் சங்கர பெருமாள் தலைமையில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பதவியில், 2,900 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
உடற்கல்வி இயக்குனர்நிலை 1, நிலை -2 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சட்டத்தின்படி, அனைத்து வகை நடுநிலை பள்ளிகளிலும், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக பணி நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.