சிறந்த கல்வி சேவை - ஆசிரியர்கள் கவுரவிப்பு Outstanding Academic Service – Teachers Honored
ருவொற்றியூர் சமூக சேவை சங்கம் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வியை கற்றுத் தரும் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி காலடிபேட்டையில் நேற்று நடந்தது. முன்னாள் மண்டல குழு தலைவர் வழக்கறிஞர் மு.தனரமேஷ் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் கோட்டீஸ்வரன் வரவேற்றார். தஞ்சை கோ.சித்தர் உடல் நலன் மற்றும் உணவு முறை குறித்து பேசினார்.
ஆசிரியர்களும் மாணவர்களும் - இன்றைய சமுதாயம் என்ற தலைப்பில், முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் மீனாஞானசேகரன் உரையாற்றினார். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் ஆ.அருண்குமார், நா.விக்ரம் ராஜ், ஜெயக்குமார், தலைமையாசிரியர்கள் முத்துசெல்வி கீதா, கிருஷ்ணன், குமரய்யா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், அனைவருக்கும் சமைக்காத இயற்கை உணவு வழங்கப்பட்டது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.