வருமான வரித் தாக்கல் படிவங்கள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 14 فبراير 2023

வருமான வரித் தாக்கல் படிவங்கள் வெளியீடு



வருமான வரித் தாக்கல் படிவங்கள் வெளியீடு - Issuance of Income Tax Filing Forms

புது தில்லி, பிப். 14: நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி யைத் தாக்கல் செய்வதற்கான படிவங்களை வரு மான வரித் துறை வெளியிட்டுள்ளது.

INCOME TAX DEPARTMENT வழக்கமாக வருமான வரித் தாக்கல் (ஐடிஆர்) படிவங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியி டப்படும். நடப்பாண்டில் வரித் தாக்கல் நடை L முறைகளுக்குக் கூடுதல் அவகாசம் அளிக்கும் நோக்கில் தற்போதே படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2023-24- ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கான ஐடிஆர் படிவங்கள் 1-6, ஐடிஆர்-வி படிவம் உள்ளிட்டவை வெளியீடு தொடர்பான அறிவிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. படிவங்களில் பெரிய அள விலான மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், 'வருமான வரித் தாக்கல் படிவங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதால் அனைத்துத் தரப்பினரும் பலனடைவர். வருமான வரி தாக்கல் செய்வோர், கணக்கா யர்கள், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய உதவும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை பலனடையும்' என்றனர்.

ஊதியம், வீட்டுச்சொத்து, மற்ற ஆதாரங்கள் உள்ளிட்டவை மூலமாக ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் வரை ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர்-1 படிவத்தைத் தாக்கல் செய்வர். தொழில் நடவடிக்கைகள் மூலமாக ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களும், ஹிந்து கூட்டுக் குடும் பங்களும் ஐடிஆர்-4 படிவத்தைத் தாக்கல் செய்வர்.

சொத்துகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுவோர் ஐடிஆர்-2 படிவத்தையும்,தொழில் நிபுணர்கள் ஐடிஆர்-3 படிவத்தையும்,தொழில் நிறுவனங்கள் ஐடிஆர்-6 படிவத்தையும் தாக்கல் செய்வர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.