கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் நிலையில் உள்ள 23 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 23, 2023

கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் நிலையில் உள்ள 23 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு



செய்தி வெளியீடு எண்:365 நாள் : 23.02.2023

செய்தி வெளி யீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கருவூல கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர் முன்கொணர்வு காலிபணியிடங்களை விரைவில் நிரப்பும் பொருட்டு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் (வகுப்பு II) நிலையில் உள்ள 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அவற்றில் 17 பணியிடங்கள் முன்கொணர்வு பணியிடங்கள் ஆகும். இந்தப் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பட்டயக் கணக்கர் / விலை மதிப்பீட்டுக் கணக்கர் ஆகும். அவர்களில் 12 பேருக்கு பணி நியமன ஆணை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்களால் இன்று வழங்கப்பட்டது. இவற்றுள், 10 பணியிடங்கள் (MBC / DC - 02: SC - 07: BC (M) - 01) முன்கொணர்வு பணியிடங்கள் ஆகும்.

பத்து ஆண்டுகளுக்கு மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு. முன்கொணர்வு காலிப்பணியிடங்களை நிரப்ப உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிதித் துறை, மனிதவள மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த முயற்சியே இதற்கு வழிவகுத்தது. புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள், 6 மாதங்களுக்கு கட்டாய பயிற்சி பெற வேண்டும். மறுசீரமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமானது அரசாணை (நிலை) எண். 42, நிதி (க.க. - 3) துறை. நாள்:16.02.2023 மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. As per the orders of the Hon’ble Tamil Nadu Chief Minister, in order to fill up the back log vacancies of the directly recruited Accounts Officers in the Tamil Nadu Treasuries and Accounts Department, notification was issued through the Tamil Nadu Public Service Commission for filling up of 23 vacancies, of the post of Accounts Officers (Class III officers), of which 17 are carried forward vacancies. The educational qualification prescribed for this post is CA / CMA.

Appointment orders for 12 candidates was handed over by Hon’ble Finance and Human Resources Minister Dr. Palanivel ThiagaRajan today. Among these 10 vacancies (MBC / DC – 02; SC – 07; BC (M) – 01) are back log vacancies. After a long gap of more than a decade, sincere efforts have been made to fill up the back log vacancies.

The concerted efforts of the Finance Department, Human Resources Department and Tamil Nadu Public Service Commission has made this happen. The newly selected candidates have to undergo mandatory induction training for 6 months. The restructured training program has been approved by the Government vide G.O.MS.No.42, Finance (T&A-III) Department, dated: 16.02.2023

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.