நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா
பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண். 76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ(3)) துறை நாள். 14.06.2018-ல் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை (Online) -ல் 14.06.2018 முதல் 13.09.2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் எண். 233/2019 மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.02.2021 தேதிய தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவின்படி 22.03.2021 முதல் 04.04.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 24.06.2022 முதல் 31.12.2022 வரை வழங்கப்பட்டது. தற்பொழுது இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக 30.06.2023 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்கள் உரிய விபரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tcp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
الثلاثاء، 28 فبراير 2023
New
கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க 30.06.2023 வரை அவகாசம்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.