+2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 2, 2023

+2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

+2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 03.03.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 6 - மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கான +2 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் அறிவுரைகள் - சார்பு.

நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் 03.03.2023 அன்று பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று "online-portal" என்ற வாசகத்தினை “Click" செய்து “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH/APRIL 2023" என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.