தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் விடுப்பு விவரங்கள் மற்றும் IFHRMS ID ஐ EMIS ல் பணி பதிவேட்டை சரிபார்த்து பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 21.01.2023 வரை நீட்டித்து ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 10, 2023

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் விடுப்பு விவரங்கள் மற்றும் IFHRMS ID ஐ EMIS ல் பணி பதிவேட்டை சரிபார்த்து பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 21.01.2023 வரை நீட்டித்து ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் விடுப்பு விவரங்கள் மற்றும் IFHRMS ID ஐ EMIS ல் பணி பதிவேட்டை சரிபார்த்து பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 21.01.2023 வரை நீட்டித்து ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

பார்வை : தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்.043443/

பிடி1/இ2/2022 நாள்.28.12.2022

பார்வையில் காணும் செயல்முறைகளின் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களது பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை 07.01.2023க்குள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.

ஆனால் இப்பணி முழுமையாக நிறைவு பெறாத நிலை சில மாவட்டங்களில் உள்ளது கவனத்திற்கு தெரிய வருகிறது. அதனால் 21.01.2023 வரை இப்பணியினை மேற்கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. 21.01.2023 அன்று இதற்கான சிறப்பு முகாம் சம்பந்தப்பட்ட பள்ளிகள்/அலுவலகங்களில் நடைபெறும். அதற்குப் பிறகு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்பதால், ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள்/அலுவலகங்களுக்குச் சென்று பணிப்பதிவேட்டிலுள்ள பதிவுகளை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும்.

பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:-

1) ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் தங்களின் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளை சரிபார்த்த பின்னர் கீழ்க்கண்ட நடைமுறையினைப் பின்பற்றி தங்களின் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பு, மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு இருப்பின் எண்ணிக்கையை tnsedschools app-ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும். Login to TNSED Schools App

*Click on e-profile> Leave Management > My Leaves

Click on the leave balance to edit the balance with correct numbers.

Please read the alerts and click on Submit

2) ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்களின் இருப்பில் உள்ள விடுப்பினை பதிவேற்றம் செய்திட My leaves scction - TNSED schools app-ல் ஜனவரி 10ம் தேதி enable செய்யப்படும்.

3) அதனைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட இருப்பில் உள்ள விடுப்பு விபரங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவதற்காக TNSED schools app மற்றும் tnemis.tnschools.gov.in ஜனவரி 24ம் தேதி cnable செய்யப்படும்.

4) ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் தங்கள் இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை பதிவேற்றம் செய்த பின்னர் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் (DDO) அல்லது பணிப்பதிவேடு பராமரிக்கும்அலுவலர் நிலையில் இருப்பில் உள்ள அளித்திடவேண்டும். விடுப்பு எண்ணிக்கையினை சரிபார்த்து ஒப்புதல் @kalviseithi

உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியல்லாத பணியாளர்கள் சார்ந்த விடுப்பு விபரங்களை தலைமை ஆசிரியர் நிலையில் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்றி சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

Login to TNSED Schools App

Click on e-profile > Leave Management > Leave Sanction request

⚫ Click on Teacher's name for leave balance approval

Verify whether each leave has been correctly updated.

Please read the alerts and click on Submit

உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விபரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்/முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்றி சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

⚫Login to tnemis.tnschools.gov.in website Click on Approvals

⚫ Click on Leave Account approvals

⚫ Verify whether each leave has been correctly updated. Please read the alerts and click on Submit

தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு விபரங்களை வட்டாரக் கல்வி அலுவலர் நிலையில் கீழ்க்கண்ட நடைமுறையைப் பின்பற்றி சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

Login to tnemis, tnschools.gov.in website

* Click on Approvals

Click on Leave Account approvals

Verify whether each leave has been correctly updated. Please read the alerts and click on Submit 5) அனைத்து ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்களும்தங்களின் IFHRMS Employee ID யினை EMIS இணையதளத்தில் school login-ஐ பயன்படுத்தி கீழ்க்கண்ட நடைமுறையினை பின்பற்றி பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

Login to emis.tnschools.gov.in

•Enter UDISE code as username and password From the list of Staff, click on pencil icon to edit Staff details.

From Menu, Click on Staff > Staff List

In the Bank details section, please enter teacher's IFHRMS Employee ID Click on Update to save the changed details

மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றி பணிப்பதிவேடுகளில் உரிய பதிவுகளை சரிபார்த்தல், இருப்பில் உள்ள விடுப்பு எண்ணிக்கையினை பதிவேற்றம் செய்தல், IFHRMS Employee ID பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.