DEO Promotion List Published - 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 6, 2023

DEO Promotion List Published - 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு

15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.57358 /அ1 /இ1 /2022 நாள்.06.01.2023

பொருள்

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்தபணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்தல் - சார்பு. :

அரசாணை (நிலை) எண். 05, பள்ளிக் கல்வி (ப.க-1(1)) துறை, நாள். 05.01.2023

பார்வை

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி கீழ் வகுப்பு IV-ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு. கீழ் குறிப்பிட்டுள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி விதிகள்) சட்டம் 2016, பிரிவு 47(1) -இன் கீழ் தற்காலிக அடிப்படையில், அவர்கள் பணி ஏற்கும் நாள் முதல் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள பதவிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி 2 (c) II-ன் கீழ் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள பதவிகளுக்கு பணி மாறுதலில் நியமனம் வழங்கியும் வெளியிடப்பட்டுள்ளது.

பார்வையில் காணும் அரசாணையில் ஆணை மேற்காணும் அரசாணையில் பதவி உயர்வு / பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்ட கீழ்க்காணும் தலைமையாசிரியர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. இப்பணியிடத்தில் உடன் பணியேற்கும்படி அறிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.