ஆசிரியர்கள்-தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு சி.இ.ஓ., ஆர்.சுவாமிநாதன் பேச்சு
அரசு பொதுத்தேர்வில் சிவகங்கை மாநில அளவில் முதலிடம் பெற ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என முதன்மை கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
சிவகங்கையில் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி விபரங்களை கேட்டறிந்தனர். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.சி.இ.ஓ.,பி.ஏ., அருளானந்து உட்பட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேர்ச்சியில் முதலிடம் நோக்கி
முதன்மை கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது: அரசு விடுமுறை நாட்களில் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
தினமும் காலை 8:15 முதல் 9:15 மணி, மாலை 4:20 முதல் 5:20 மணி வரை மட்டுமே சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். அரசு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை 6 வது இடத்தில் உள்ளது. இதை வரும் கல்வி ஆண்டு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில முதலிட பட்டியலில் கொண்டு வரவேண்டும்.
இதற்கு ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக தேசிய திறன், வழித்தேர்வில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 10 மாணவர்களாவது தேர்ச்சி பெற வேண்டும்.
அப்போது தான் தொடர்ந்து அம்மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவி தொகையை பிளஸ் 2 வரை பெற முடியும், என்றார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.