நீட் முதுநிலை நுழைவு தேர்வு பதிவு சென்னை, புதுச்சேரியில் மையங்கள் நிரம்பின: கூடுதல் மையம் அமைக்க விண்ணப்பதாரர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 16 يناير 2023

நீட் முதுநிலை நுழைவு தேர்வு பதிவு சென்னை, புதுச்சேரியில் மையங்கள் நிரம்பின: கூடுதல் மையம் அமைக்க விண்ணப்பதாரர்கள் கோரிக்கை

நீட் முதுநிலை நுழைவு தேர்வு பதிவு சென்னை, புதுச்சேரியில் மையங்கள் நிரம்பின: கூடுதல் மையம் அமைக்க விண்ணப்பதாரர்கள் கோரிக்கை

நீட் முதுநிலை நுழைவு தேர்வுக்கான சென்னை மற்றும் புதுச்சேரியில் தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கூடுதல் மையம் அமைக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்ட தமிழ்நாட்டில்தான், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பை அதிகம் பேர் எழுதுவார்கள். அப்படி இருக்கும்போது சென்னை மற்றும் அதற்கு அருகில் இருக்கும் புதுச்சேரியிலும் கூடுதலாக தேர்வு மையங்களை அமைக்க விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சென்னையில் ஒரு தேர்வு மையத்தை ஒதுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக விண்ணப்பதாரர்கள் 022-61087595 என்ற எண்ணிலோ, https://exam.natboard.edu.in/communication.php?page=main என்ற இணையதள முகவரியிலோ சென்று தெரிந்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.