தொலை தூரப் படிப்புகளுக்கான பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்.12ம் தேதி தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 16 يناير 2023

தொலை தூரப் படிப்புகளுக்கான பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்.12ம் தேதி தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தொலை தூரப் படிப்புகளுக்கான பருவத் தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்.12ம் தேதி தேர்வு

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள தொலை தூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமையிலும் சில தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தொலைதூரப் படிப்புகளில் ஆகஸ்ட், செப்டம்பர் 2022ம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கான அட்டவணையில் ஞாயிற்றுக் கிழமையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், வரும் 30ம் தேதி முதல் தேர்வு தொடங்கி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சில தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தவகையில், அறிவுசார் சொத்து உரிமைகள், சில்லரை தளவாடங்கள், மருத்துவ சுற்றுலா, நீடித்த முதலீடுகள் மற்றும் நிதி முடிவுகள், வணிகத்தின் சட்ட அம்சங்கள், கூறுகள் சார்ந்த தொழில்நுட்பம், மின் வணிகம், தரவுத்தள மேலாண்மை அமைப்பு உள்பட சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெற இருக்கிறது. வழக்கமாக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வு ஆகியவைகள் தான் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும். ஆனால் தற்போது பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வும் ஞாயிற்றுக் கிழமையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.