தொழிற்பள்ளி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 14 يناير 2023

தொழிற்பள்ளி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

தொழிற்பள்ளி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிற்பள்ளி அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2023-24 ஆம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2023-2024 ஆம் கல்வியாண்டுக்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் ,கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் இணையவழியில் வங்கி மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 28 ஆம் தேதியாகும். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 044-22501006 (113) என்ற தொலைபேசி எண்ணிலும் அறியலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.