ஆதிதிராவிடர் பள்ளிகளில் 7 ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் - 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 14 يناير 2023

ஆதிதிராவிடர் பள்ளிகளில் 7 ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் - 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் பள்ளிகளில் 7 ஆசிரியர்கள் பணியிடம்

சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெங்கடேசபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், இரண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

திருமங்கலம் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவுக்கும், மதுரவாயல் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் ஆங்கில ஆசிரியரும், பாலவாக்கம் அரசு பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல, கன்னிகாபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளியிலும், இயற்பியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் ஏழு பணியிடங்கள் உள்ளன.

விருப்பமுள்ள ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.