அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறதா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 7 يناير 2023

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறதா?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறதா?

கடந்த, இரு ஆண்டுக்கு முன், கொரோனா ஊரடங்கால், பள்ளிகள் மூடப்பட்டன; இக்கால கட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் மூலம், 'ஆன் லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை, அருகேயுள்ள அரசுப்பள்ளிகளில் பெற்றோர் சேர்த்தனர்.

குறிப்பாக, துவக்கப்பள்ளி அளவில், நகர்ப்புறங்களை ஒட்டியிருந்த ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது. இலவசமாக கிடைத்த புத்தகங்களை வாங்கி, வீட்டில் இருந்தபடி தங்களை பிள்ளைகளை பெற்றோர் பலரும் படிக்க வைத்தனர்.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் முடிந்து, கடந்த, ஜூன் மாதம், நடப்பு கல்வியாண்டு துவங்கியது: பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. பெற்றோர் எதிர்பார்ப்பு

ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் கல்வி போதிப்பு முறையில், பெற்றோர் முழு திருப்தியடைகின்றனர். அதே நேரம், வெறும் படிப்பு மட்டுமல்லாமல், மாணவர்களின் பிற திறமைகளை வளர்க்கும் வகையிலான பயிற்சியை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக கராத்தே, யோகா, இசைப்பயிற்சி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் தங்கள் பிள்ளைகள் பயிற்சி பெற வேண்டும் என, கருதுகின்றனர்.

இந்த வாய்ப்பு, தனியார் பள்ளிகளில் கிடைக்கிறது என்பதால், பெற்றோர் பலரும், அரசுப்பள்ளிகளில் பயின்ற தங்கள் பிள்ளைகளை, மீண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். பெற்றோரின் எதிர்பார்ப்பு சார்ந்த இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்தினால், அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை தக்க வைக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.