பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜன.27 முதல் ஆய்வுக் கூட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 15 يناير 2023

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜன.27 முதல் ஆய்வுக் கூட்டம்

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜன.27 முதல் ஆய்வுக் கூட்டம்

சென்னை, ஜன. 14: தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாமல்லபுரத்தில் ஜன.27 முதல் 29- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத் திட்டங்களைக்கண்காணிப்பதற்காகமாதந்தோறும் அலுவல் ஆய் வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் துறை சார்ந்த செயல் பாடுகள் தொடர்பாக விவாதித்து, அடுத்த கட்டப் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

அதன்படி,நடப்பு மாதாந்திர அலுவல் ஆய் வுக் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜன. 27 முதல் 29-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வி ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி,செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகா ரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட வுள்ள புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலை, பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற்பாடு கள்,மாணவர்களின் கல்விச் சுற்றுலா, இடைநின்ற மாணவர்களின் கணக்கெடுப்பு பணிகள், நீதிமன்ற வழக்குகள், நிதி செலவீனங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.