பள்ளிகளுக்கு 1 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 26 يناير 2023

பள்ளிகளுக்கு 1 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது



பள்ளிகளுக்கு 1 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது The work of printing 1 crore textbooks for schools has started

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு 1 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 30 தலைப்புகளில்  48 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கும் பணியும், பத்தாம் வகுப்புக்கு ஆங்கிலம், தமிழ், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 50 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. மேலும், பிற வகுப்புகளுக்கான புத்தகங்கள்(முதல் பருவம்) 124 தலைப்புகளில் அச்சிடப்பட உள்ளன.

இவை மொத்தம் 4 கோடி அளவுக்கு அச்சிடப்படும். இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கி மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவ மாணவியருக்கு இலவசமாக அந்த புத்தகங்கள் வழங்கப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.