பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள்: UGC வெளியீடு - Guidelines on Safety for Women: UGC Publication - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 29 ديسمبر 2022

பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள்: UGC வெளியீடு - Guidelines on Safety for Women: UGC Publication

பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள்: UGC வெளியீடு - Guidelines on Safety for Women: UGC Publication

கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

இது குறித்து, யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1. ஆசிரியர்கள், பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவிகள் என பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

2. மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

3. அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும்.

4. மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப பெண் போலீஸ்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

5. 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை வசதி கட்டாயம்.

6. புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் தொழில் முனைவோர்களாக பெண்களை மாற்றுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுரை வழங்கியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.