நாளை சனிக்கிழமை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 16 ديسمبر 2022

நாளை சனிக்கிழமை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு

நாளை சனிக்கிழமை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 17) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9-ல் விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலைநாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை காரணமாக டிசம்பர் 2-ல் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை (டிசம்பர் 17) அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகையான மெட்ரிக் பள்ளிகளும் செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை

மாண்டஸ் புயல் மழையின் காரணமாக 09:12:2022 அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாளினை ஈடு செய்திடும் பொருட்டு 17:122022 அன்று (சனிக் கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் வெள்ளிக் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி செயல்படவேண்டும் என அறிவிக்கப்படுகிறது.



சுற்றறிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 02.11.2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்யும் விதமாக நாளை 17.12.2022 சனிக்கிழமை அன்று அரசு / அரசு உதவிபெறும் | ஆதிந நகராட்சி தொடக்க நடுநிலை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அளைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.