அகவிலைப்படி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 28 نوفمبر 2022

அகவிலைப்படி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

அகவிலைப்படி உயர்வு வழக்கில் அரசு மேல்முறையீடு: போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் நலச் சங்கம் கண்டனம்

அகவிலைப்படி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

அரசுப் போக்குவ ரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங் குவது தொடர்பான வழக்கில் திமுக அரசுமேல்முறையீடு செய் துள்ளதற்கு ஓய்வூதியர் நலச் சங் கத்தினர் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத் துக் கழக ஓய்வூதியர் நலச் சங் கத்தின் திருச்சி கிளைத் தலை வர் என். மணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: நடைமு றையில் உள்ள ஓய்வூதிய திட்ட விதிகளின்படி, அரசுப் பணியா ளர்களுக்கு அகவிலைப் படி உய ரும் போது, பணியில் உள்ள மற் றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்க ளுக்கும் உயர்த்தி வழங்க வேண் டும். ஆனால், 2015ஆம் ஆண் டிலிருந்து, அப்போது ஆட்சி யிலிருந்த அதிமுக அரசு, ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிதி நெருக்கடி என காரணம் கூறி தாமதப்படுத்தி வந்தது.

8 ஆண் டுகளாகியும் உயர்வு இல்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் வழங்குவ தாக திமுக தலைவர் மு.க.ஸ் டாலின், தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்தார். திமுக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளாகப் போகிறது. ஆனாலும் அமல்ப டுத்தப்படவில்லை.

ஓய்வூதியர்களின் பல்வேறு அமைப்புகளும், அதிகாரிகளின் ஓய்வூதியர்களின் அமைப்புக ளும் உயர்நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் தாக் கல் செய்த வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் 2 மாதங்களில் அகவி லைப்படி உயர்வை வழங்க செப் டம்பர் மாதம் உத்தரவு பிறப்பிக் கப்பட்டது.

இந்த உத்தரவையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. மாறாக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அக விலைப்படி உயர்வு வழங்கக் கோரும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவை யும் பெற்றுள்ளனர். தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தா விட்டாலும், நீதிமன்ற உத்த ரவை கூட அமல்படுத்தாமல் மேல்முறையீடு செய்திருப்பது தொழிலாளர் விரோதப் போக் கையே திமுக அரசும் கடைப்பி டிக்கிறது. ஓய்வூதியர்கள் கோரு வது மானியமோ, சலுகையோ இல்லை. சட்டப்படி வழங்க வேண்டிய பணப்பலன்கள் தான். அவற்றைக் கூட வழங்கா மல் காலதாமதம் செய்வது கண் டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.