அரசு ஊழியா்கள் மின்சார வாகனங்கள் வாங்க முன்பணம்: அரசு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 13 نوفمبر 2022

அரசு ஊழியா்கள் மின்சார வாகனங்கள் வாங்க முன்பணம்: அரசு உத்தரவு

அரசு ஊழியா்கள் மின்சார வாகனங்கள் வாங்க முன்பணம்: அரசு உத்தரவு

அரசு ஊழியா்கள் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இரு மற்றும் நான்கு சக்கர சாதாரண வகை வாகனங்களை வாங்க முன்பணம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிதித் துறை வெளியிட்ட உத்தரவு:

நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் மத்திய அரசு ஊழியா்களுக்கு அவா்களது பணிநிலைக்கு ஏற்ப முன்பணம் வழங்கும் உத்தரவை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இதேபோன்று, தமிழக அரசில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் ரூ. 6 முதல் 14 லட்சம் வரையில் முன்பணத் தொகை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வாகனச் சந்தைகள் நாளுக்கு நாள் விரிவாக்கம் பெற்று வருகின்றன. குறிப்பாக, புதிய புதிய வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மின்சார வாகனங்கள் அதிக அளவு பிரபலம் அடைந்துள்ளன. இந்த வாகனங்களைப் பெறவும் அரசு ஊழியா்கள் விருப்பம் தெரிவிக்கிறாா்கள்.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டால் காா்பன்டை-ஆக்சைடு வாயுவும் குறையும் நிலை ஏற்படும் என போக்குவரத்துத் துறை ஆணையா் தெரிவித்துள்ளாா். எனவே, தமிழக அரசு ஊழியா்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு வசதியாக அதற்கும் முன்பணத் தொகை வழங்க போக்குவரத்துத் துறை பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று, மின்சார வாகனங்களை தமிழக அரசு ஊழியா்களும் வாங்க முன்பணம் அனுமதிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.