கனமழை முன்னெச்சரிக்கை - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (03.11.22) விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 2 نوفمبر 2022

கனமழை முன்னெச்சரிக்கை - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (03.11.22) விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கடலோரப் பகுதிகள் உள்பட உள் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே, நாளை 14 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.