10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண், 50 மாணவர்கள் சிம்லாவுக்கு சுற்றுலா; சென்னை மாநகராட்சி ஏற்பாடு
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தேசிய கல்வி சுற்றுலாவிற்காக சிம்லாவுக்கு சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று, சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே 11ம் வகுப்பு பயிலும் 50 மாணவர்களை மாநகராட்சி தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அழைத்துச்செல்ல முடியாத சூழலில் இந்தாண்டில் தேசிய கல்விச் சுற்றுலாவிற்கு சண்டிகர், சிம்லா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சண்டிகர் விரைவு ரயில் மூலம் 40 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 50 மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.
சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இனிப்புகள், உணவுகள், குளிர்பானங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பிற்காக உதவி கல்வி அலுவலர் தலைமையில் 5 ஆசிரியர்கள் செல்கின்றனர். இந்தாண்டு மாணவர்களின் தேசிய கல்விச் சுற்றுலாவிற்காக சென்னை மாநகராட்சி ரூபாய் 9.17 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.