Will schools open as scheduled after the quarterly vacation? - காலாண்டு விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 20 سبتمبر 2022

Will schools open as scheduled after the quarterly vacation? - காலாண்டு விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா?

காலாண்டு விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா?

காலாண்டு விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.



இதற்கிடையே தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பிறகு ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ அமல்படுத்தப்படவுள்ளதால், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அக். 6, 7, 8 தேதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த பயிற்சியில் தொடக்கக் கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இதனால், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு அக். 10 க்கு மாற்றப்பட்டுள்ளது. பிற வகுப்பு மாணவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல் அக். 6-ல் வகுப்புகள் தொடங்கப்படும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.